Monday, 23 December 2013

ஹலால் எதிர்ப்பு கோஷம் எச்சந்தர்ப்பத்திலும் ஹலாலை அழித்து விடாது!

- A.J.M மக்தூம் -
உலகம் முழுவதிலும் வாழும் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் மாத்திரம் ஹலால் உணவு உட்கொள்ளவில்லை,மாற்றமாக சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சந்தைப் படுத்தும் ஏறத்தாழ இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிடத் தக்க ஹலால் உற்பத்திகள் முஸ்லிம் அல்லாத 500 மில்லியன் மக்களால் நுகரப்படுகிறது என புள்ளிவிபரம் ஒன்று தெளிவு படுத்துகிறது.
ஹலால் என்பது அரபு வார்த்தையாகும், அது அனுமதிக்கப் பட்டது என்ற கருத்தைக் கொண்டுள்ளது. அதாவது இறைவனால் அனுமதிக்கப் பட்டது என்பதாகும். இறைவன் என்று சொல்லும் போது முழு மனித சமூகத்தையும் படைத்து பரிபாலிப்பவன் ஒரே இறைவனே. அவனுக்குத்தான் முழு சமூகத்துக்கும் எதில் நலவு இருக்கின்றது என்பது தெளிவாக தெரியும். எனவே தான் எமது வாழ்வு சீர் பெற சிலவற்றை எமக்கு அனுமதித்தும், இன்னும் சிலதை தடுத்தும் இருக்கின்றான். இதனையே ஹலால், ஹராம் என நாம் பிரித்தரிகின்றோம்.
ஹலால் வழக்கமாக உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப் பட்டு வந்த போதிலும், இன்று வர்த்தக ரீதியாகவும் பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இறைவனால்  அனுமதிக்கப் பட்ட ஹலால் உற்பத்திகள் அனைத்துமே மிகவும் தூய்மையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களையே கொண்டுள்ளது என்பது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை என்பது அனைவருக்கும் வெளிச்சமாகி வருகிறது. இதன் காரணமாகவே முஸ்லிம் அல்லாத பெரும் தொகையான மக்கள் அதனை பயன்படுத்த நிர்பந்திக்கப் படுகின்றனர்.
இன்று சர்வதேச மட்டத்தில் ஹலால் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்து கொண்ட முஸ்லிமல்லாத பல வர்த்தக நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஹலால் பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டன. ஹலால் உணவு $10.3 பில்லியன் டாலர் மேலதிக வருமானத்தை தமது நாட்டுக்கு பெற்றுத் தருவதால், 2020 ல் ஹலால் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்க நடவடிக்கை மேட்கொண்டுள்ளதாக அண்மையில் ஜப்பானிய அரசு தெரிவித்து இருந்தமை இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டிய ஒன்றாகும். ஹலால் என்றால் என்ன என்று தெரியாத இவர்கள் முஸ்லிம் அமைப்புக்களின் உதவிகளை நாடவேண்டி ஏற்பட்டது.
இது ஒரு புறமிருக்க, சில வர்த்தக நிறுவனங்கள் போலியான முறையில் ஹலால் பெயரிட்டு தமது உற்பத்திளை சந்தைப் படுத்தி இலாபம் அடைய முயட்சிக்கின்றமை கண்கூடானதாகும். இது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே முஸ்லிம் சமூகம் சேவை நோக்கம் கருதி பொருற்களை பகுப்பாய்வு செய்ததன் பின் அதற்கு ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.
ஹலால் என்பது முஸ்லிம்களால் பயன்படுத்தப் பட்டு வந்த பெயர் என்பதால் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு இனவாத கும்பல் அதற்கு எதிராக கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது இலங்கையில் மாத்திரம் உள்ள பிரச்சினை இல்லை. உலகமெங்கும் இதே பிரச்சினை தான். இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது அவர்கள் இனத்தை சார்ந்த சமூகமே என்பதை சற்று நிதானமாக சிந்திப்பார்கள் என்றால் புரிந்து கொள்வார்கள்.
முஸ்லிம்களை பொறுத்த மட்டில் அவர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஹலாலானதாக அமைத்துக் கொள்வது அவசியம் என்பதால் அவர்கள் வளமைப் போன்று எப்போதும் ஹலாலை தேடிக் கொள்வார்கள். ஹலால் எதிர்ப்பு கோஷத்தினால் பெருமளவில் அவர்கள் நஷ்டமடைய மாட்டார்கள் என்பது நிதர்சனம். ஹலால் எதிர்ப்பு கோஷம் எச்சந்தர்ப்பத்திலும் ஹலாலை அழித்து விடாது. எனவே முஸ்லிம்கள் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என கருதுகிறேன்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும்அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும்,மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டுஅவனே தன் தூதரை நேர்வழியுடனும்சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.(அல் குர்ஆன்  61:8,9)

No comments:

Post a Comment